#மறந்து போன வழிபாடு

 இறைவரின் அபிஷேகத்துக்கு  தூய்மையான கிணற்று நீர்,ஆற்றுநீர்  இரண்டும் முதன்மையானது. 


#சென்றாடும் தீர்த்தங்கள் ஆவார் தாமே எனும் அப்பர் வாக்கினால் தீர்த்தங்கள் இறைவனோடு தொடர்புடையதாகும்.இதனை அக்காலத்தில் தூய்மையனவர்கள் மங்கல வாத்தியங்கள் முழங்க நாள்தோறும் கொண்டு வருவார்கள்.


அவ்வாறு கொண்டு வரும் நீரினுள் கமலம்,உத்பலம்,பாதிரி போன்ற மணமுள்ள மலர்களை இட்டு சுமந்து சிவாச்சாரிய பெருமக்கள் வருவார்கள்...இதுவே அக்கால நடைமுறை.  சிவச்சாரியார்கள் மட்டுமின்றி திருக்கோயில் வழிபாட்டுக்கு செல்லும் அடியோர்களும் நீரையும்,மலர்களையும் கொண்டு செல்ல வேண்டும் என்பதே சைவசமய வழக்கம்..... 


மூவர் முதலிகள் இருந்த காலத்தில் அடியார்கள் சிவாலய வழிபாட்டுக்கு செல்லும் போது இறைவரின் அபிசேகத்துக்கு நீரும் மலரும் கொண்டு செல்வது வழக்கமாக இருந்திருகின்றது என்பது திருமுறை சான்று....


இதை தான் திருவையாறு பதிகத்தில் #அப்பர் பெருமான்


 #போதோடு நீர்சுமந்து ஏத்தி புகுவார் அவர்பின் புகுவேன்"


என பாடுகிறார்.#திருஞானசம்பந்த பெருமானும் திருவிடைமருதூரில் 


"தடங்கொண்டதொர் தாமரை 

 பொன் தன்முடி மேல் 

குடங்கொண்டு அடியார் குளிர்நீர் சுமந்தாட்ட"


இதன்மூலம் சிவாலயம் செல்லும் போது நீரும், மலரும் எடுத்து செல்லுதலே நம் சைவசமய மரபாக இருந்துள்ளது என்பதே உணர்க.


தற்போது இது முற்றிலும் ஒழிந்து போனது மிக்க வருத்தமே.....


சொக்கநாதா

சொக்கநாதா

Comments

Popular posts from this blog

சவுக்கு சங்கர் யை பற்றிய எனது கருத்து

உன் வேலையை நீயே செய்

நான் என்னுடைய வருவாயை அதிகப்படுத்த என்னென்ன செய்யலாம்?