சவுக்கு சங்கர் யை பற்றிய எனது கருத்து
சவுக்கு சங்கர் அவர்களைப் பற்றி ஒரு கட்டுரை
நான் ஆறு மாதத்திற்கு முன்பு ஷேர் மார்க்கெட் அதில் டிரேட் செய்து கொண்டிருந்தேன் அந்த தருணத்தில் அதில் ஒரு ஊழல் நடந்ததாக ஒரு குற்றச்சாட்டு வந்தது
அந்த அதிகாரி சித்தா ராமையா என நினைக்கிறேன். அது பெண்மணி அவர் ஊழல் செய்ததாக ஒரு தகவல் அதைப் பற்றி நான் யூடியூபில் தேடும்போது ரெட்பிளிக்ஸ்ம் சவுக்கு சங்கர் அண்ணனும் பேசிக் கொண்டிருந்த ஒரு வீடியோவை பார்த்தேன்
50 நிமிடம் இருந்தது மற்ற வீடியோக்களை எல்லாம் பத்து நிமிடம் இருக்கும் இது என்னடா 50 நிமிடம் ஒரு மணி நேரம் செலவழித்து பார்க்க வேண்டுமா என்று யோசித்து சரி இருக்கட்டும் பார்ப்போம் என்ன என்று அந்த வீடியோவை கிளிக் செய்தேன்
அந்த தருணத்தில் தான் சவுக்கு அவர்களின் அந்த பேச்சுத் திறமை மற்றும் யாராலும் கூற முடியாத சில விவரங்களையும் தெளிவாக சாமானியனுக்கும் எல்லாருக்கும் புரியும்படி ஒரு ஆசிரியர் மாணவனுக்கும் இடையே நடக்கும் ஒரு புரிதல் போல மிகச் சிறப்பாக எடுத்துரைத்திருந்தார்.
அந்த வீடியோவில் நான் பார்க்க போனது அந்த ஊழல் பற்றிய தகவல்களை ஆனால் சவுக்கு அவர்களின் பேச்சு திறமையை பார்த்து வியந்தேன
எப்படி இவ்வளவு விஷயங்களை கூறுகிறார் தெரியவில்லை ஒருவேளை நியூஸ் சேனல்களில் வந்திருக்குமோ அதை தான் இவர் கூறுகிறாரா என்பதையும் நான் யோசித்தேன்
ஓகே ரைட்டு சில தெரியாத விஷயங்கள் அறிந்துகொண்டோம் என விட்டுவிட்டேன்
அப்பொழுது தான் RED PIX எனும் அந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொண்டேன்
மேலும் அதற்குப் பின்னும் சில வீடியோக்கள் வர ஆரம்பித்தது அந்த தருணத்தில்் உதயநிதி அவர்களே பற்றிய ஒரு வீடியோ
பார்க்கும்போது உதயநிதி அவரைப் பற்றிய ஒரு தெளிவான பார்வையை நான் பெற்றதாக உணர்ந்தேன் காரணம் வெளி உலகத்திலிருந்து பார்க்கும் போது ஒரு சாமானியனுக்கு இந்த எம்எல்ஏ சிறப்பாகத்தான செயல்படுகிறார் என்ற பிம்பம் ஏற்படும் எதைப் பார்த்து செய்தித்தாள் பார்த்து செய்திகளைப் பார்த்து நியூஸ் சேனல்களை பார்த்து தெரியும் ஆனால் அவர்களைப் பற்றிய மற்றொரு பிம்பம் இது மீடியாக்களால் உருவாக்கப்பட்ட ஒரு பிம்பம் என்பதை சவுக்கு சங்கர் அவர்கள் கூறிய சில விஷயங்களை வைத்து தெரிந்து கொண்டேன்
மேலும் பார்க்கப்போனால் எப்படி இவ்வளவு தைரியமாக இவர் பேசுகிறார் என நினைத்து பரவாயில்லை என்று அடுத்தடுத்து வீடியோக்களை பார்க்க ஆரம்பித்தேன்.
நண்பர்களுக்கு ஷேர் செய்தேன் ஒரு இரண்டு நாள் கழித்து எனது நண்பர்களுடன் பேசும் போது ,
அந்த நண்பர் கூறினார் யாருப்பா அவரு இப்படி பேசுறாரு இந்த மாதிரி ஆச்சரியப்பட்டார் அவர் பார்த்தீங்கன்னா டிஎம்கே திமுக காரர்கள் எனக்கு ஆச்சரியமானது தொடர்ந்து ஒவ்வொரு வீடியோக்களை ஒவ்வொன்றாக பார்க்க ஆரம்பித்தேன்.
அவரும் சில வீடியோக்களை எனக்கு அனுப்பி விட்டார் எடப்பாடி பழனிசாமி மை போட்டு கிழிந்த வீடியோ ஒன்றை எனக்கு அனுப்பி விட்டார்.
அதை பார்த்து எடப்பாடி அவரையும் போட்டு பொளந்து இருக்கார் பார் என்றார்
அப்போது தான் அறிந்தேன் சவுக்கு சங்கர் தைரியத்தில் மறு உருவம் என்று
என் நண்பர் கூறினார் சவுக்கு யாரையும் விட மாட்டார் போல மனசுல இருக்கறத அப்படியே பேசுறார் என சொன்னார்
அதன்பின் தொடர்ந்து ஒவ்வொரு வீடியோக்களை பார்க்க பின் இவர் ஒரு பெரியாரின் தீவிர பக்தன் என்பது அறிந்து கொண்டேன்.
இவர் ஒரு கவர்மெண்ட் அதிகாரி என்பதையும் அதன் பின்னர் தெரிந்து கொண்டேன்.
இவரைப் பற்றி விவரங்களை தினந்தோறும் தெரிந்து கொண்டேன்.
படிக்க படிக்க , கேட்க கேட்க ஆர்வம்
ஆறு மாத காலமாக தொடர்ந்து இவர்களை பாலோ செய்து அறிந்து கொண்டேன் பல தரவுகள் என மூளைக்கு எட்டியது
இவர் சஸ்பென்ஸ் செய்யப்பட்டது எதனால் சஸ்பென்ஸ் செய்யப்பட்டது என தொடர்ந்து அனைத்து வீடியோக்களும் ஒன்றன் பின் ஒன்றாக பல நேரம் செலவழித்து பார்த்தேன்.
மிகவும் பிடித்த மனிதராக மாறிவிட்டார் திடீரென்று ஒரு நாள் இந்த மாதிரி கோர்ட் கேஸ் மதுரை அப்படி இப்படின்னு சில செய்திகள் வர அதையும் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
திடீரென்று ஒரு நாள் இவருக்கு எதிரான தீர்ப்பு
அப்பொழுது கூட சங்கர் அண்ணா அவர்கள் மனம் தளராமல் உணவு இடைவெளை போன்ற தருணங்களிலவ கொடுத்த இண்டர்வியூ மன தைரியத்தை அளித்தது.
பின் சிறை சென்ற நாள் முதல் வெளிய வந்த நாள் வரை மனது எதையோ இழந்தது போல் இருந்து என்பதே உண்மை
இதை அண்ணனை பாலோ செய்யும் அனைவரும் உணந்தததே
ஏதோ ஒரு நியூஸ் அண்ணணை பற்றி வருமா என்று அனைத்து வீடியோக்களையும் பார்ப்பேன் சீமான் முதல் குரலாக கொடுத்திருந்தார்.
பல குரல்கள் அண்ணணுக்காக blue sattai
Advocate அல் புகாரி என்ற ஒரு வழக்கறிஞர் பல அப்டேட்டுகள் தந்து கொண்டிருந்தார் அது நம்பிக்கையை ஏற்படுத்தியது .
வழக்குரைஞர் புகழேந்தி - உண்மையான நண்பர் 🙏பெலிக்ஸ் 🔥🔥🔥
தடா ரஷூம் நட்புக்கு அடையாளம்
பல பேர் அண்ணனுக்காக உழைத்தனர் என்பதே உண்மை
வேல் முருகன் - Costfi இருவரும் சமுக வலைத்தளத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தனர் அவர்களின் முன்னேடுப்பே இன்று சங்கர் அண்ணர் நம் முன் 🤝🙏🙏
வெளியே வந்து விடுவார் என்று நம்பிக்கை எனக்கு இருந்தது.
அதே சமயம் இன்றைய திமுக அரசு குண்டாஸ் போட்டு விடுமோ என்ற அச்சம் அதிகமாக இருந்தது.
அதேபோல் வெளியே வந்துவிட்டார் அவரை பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டுமே எனக்கு தோன்றியது . ஆனால் இவர் பற்றி பேசினால் எழுதினால் பேசிக்கொண்டே போகலாம் என்பதை உண்மை
சங்கர் அண்ணா அவரை அவரே மேலும் மேலும் மேறுகேற்றி கொள்கிறார்.
சிறையில் இருக்கும்போது கூட அங்கே உள்ள சில அதிகாரிகளை மெத்தனம் போக்கும் அவர்களின் அதிகாரத்திமிரையும் வெளிக்கொண்டு வந்துள்ளார் .
மேலும் அங்குள்ள கைதிகளை சித்ரவதை படுத்தும் சிறை அதிகாரிகள் பற்றிய ஊண்மையயும் வெளியே கொண்டுவந்து அதற்கு மனித உரிமை ஆணையத்திலும் புகார் அளித்துள்ளார் .
நான் அவர்களைப் பார்த்து வியந்தது பல பல அவர்களின் செயல்கள் ஒவ்வொரு குடிமகன்களிடமும் இருக்க வேண்டும் என்பதை நான் தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் .
மேலும் சவுக்கு சங்கர் அவர்களின் மீது உள்ள எனது பார்வையை 2,3 கட்டுரைகளாக வெளியிடுவேன் .
நன்றி வணக்கம்
Comments
Post a Comment