ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி?
66 என்ற எண்ணை நினைவில் கொள்ளுங்கள்.
66 அடி x 66அடி = 4356 ச.அடி.
66 அடி அகலம் ( அல்லது நீளம் ) கொண்ட சதுர நிலத்தின் பரப்பு 4356 சதுர அடி .
இந்த 66 ஒன்றும் மந்திர எண்இல்லை .
நிலங்களின் நீளத்தை அளக்க , ஒரு சங்கிலி யைப் பயன்படுத்துவார்கள் . அதன் நீளம் ஒரு செயின் ( 1 chain) = 66 அடி .
1 சங்கிலி நீளம் , ஒரு சங்கிலி அகலம் உள்ள சதுர நிலம்
66 * 66 = 4356 சதுர அடி பரப்பு உள்ள சதுர நிலம்
இந்த 4356 ச. அடி என்பது 10 சென்ட்.
ஒரு சென்ட் என்பது எவ்வளவு என்று நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.( 435.6 ச.அடி )
1 ஏக்கர் நிலம் என்பது இந்த 10 சென்ட் நிலத்தைப் போல் 10 மடங்கு அதிகமானது . அதாவது 100 சென்ட் ஓரு ஏக்கர்.
( ஓரு சென்ட் (cent) என்பதின் பொருளே 1/100 என்பது தான்)
ஆக 1 சென்ட் நிலம் என்றாலே (1/100) ஏக்கர் நிலம்.
10 சென்ட் ( 4356 ச அடி ) , ஒரு ஏக்கரில் 10 ல் ஒரு பங்கு.
( 66 ஐ மறக்க வேண்டாம்.)
பொதுவாவாக ஒரு வீடு கட்ட 5 சென்ட் இடம் தேவை ,
66 அடி நீளம்* 33 அடி அகலம் உள்ள இடம் 66* 66/ 2 = 10 சென்ட்/ 2 = 5 சென்ட்.
Comments
Post a Comment