ஒரு நாளை சிறப்பாகக் கழிக்க என்னென்ன செயல்கள் செய்யலாம்?
ஒரு நாளில் எட்டு மணி நேரத்தை உறக்கத்தில் கழித்துவிடவேண்டும். இது உடலுக்கு நல்ல ஓய்வை அளித்து, உடல் நன்கு செயல்பட உதவும்.
ஒரு எட்டு மணி நேரத்தை, நாம் பொருளீட்ட ஏற்றுக்கொண்ட பணியில் கழித்துவிடவேண்டும். உடலுக்கு வேண்டிய பராமரிப்புகளுக்கு (உணவு, உடை, உறைவிடம்)இது மிகவும் அவசியமல்லவா?
ஒரு இரண்டு மணி நேரம் பணிக்குச் சென்றுவரச் செலவிடவேண்டிய கட்டாயம் ஏற்படும்.
ஒரு மணி நேரமாவது, காலைக் கடன்கள், உணவு உண்ண, ஆகியவற்றிற்குச் செலவாகிவிடும்.
ஒரு மணி நேரம், நாம் உடற்பயிற்சிக்கு ஒதுக்கவேண்டும். இல்லாவிடில் உடல் நலம் கெடும். ஒன்றுமில்லை, ஒரு நடைப் பயிற்சி போதுமானது!
ஒருமணியாவது தொலைக்காட்சிக்கு ஒதுக்கவில்லை எனில், நாட்டு நடப்புகளை எவ்வாறு அறிவது?
குழந்தைகளுமன், வாழ்க்கைத் துணையுடன், பெற்றோருடன், உறவினருடன் உரையாடலில் ஒரு மணி நேரம் கழித்தல், மனமகிழ்ச்சியை அளித்து மனநலம் காக்கப்படலாம்!
ஆத்திகரானால், ஒரு மணிநேரம் இறைவழிபாடும், நாத்திகரானால், இறைவசைபாடும், தலைவர் வழிபாடும் செய்ய நேரம் சரியாக இருக்கும்.
எஞ்சியது ஒரு மணி நேரமே! இந்த ஒரு மணி நேரத்தில் நாம் என்ன செய்வது என்பதைத் திட்டமிட்டோமானால் போதுமே! எல்லா நாட்களும் சிறப்பாக அமைந்துவிடும் என்பதில் ஐயமென்ன?!
Comments
Post a Comment