A common man's journey against the wrongs of the ruling class
சவுக்கு சுழலும் 🔥🔥🔥🔥
சவுக்கு சங்கர் அவர்களின் இன்றைய ஆதன் youtube சேனல் வழங்கியிருந்த பேட்டியை தற்போது தான் பார்த்து முடித்தேன்
அவர் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் கலங்க வைக்கிறது
மேலும் மிகவும் சந்தோஷத்தை ஏற்படுகிறது அவரை பார்க்க பார்க்க மனதில் ஒருவிதமான சந்தோசம் நாம் எதையோ சாதித்த வெறி முதல் கொண்டு பல விஷயங்கள் மனதில் தோன்றுகிறது
காரணம் அவர் நமது குரலாக இருக்கிறார் அதை அவர் உணர்ந்து இருக்கிறார் என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன் .
மேலும் அவர்களின் வார்த்தைகள் அனைத்தும் கேட்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது .
அவர் நமக்காக என்ன செய்ய வேண்டும் என்று யோசிக்கிறார் . அதை வெளிப்படுத்துகிறார் இதற்கு மேலும் தொடர்ந்து செயல்படுவது தான் அவர்களுக்கு நான் தரும் கைமாறு என்பதையும் அவர் உணர்கிறார்
அவர் சிறையில் இருந்து விடுதலையானவுடன் சிலர் கண்ணீர் சந்தோசத்தில் கண்ணீர் வடித்தனர் என கூறினர். அன்றைய தினத்தில் பலரின் மனநிலை அப்படி தான் இருந்தது.
இந்த கட்டுரை படிக்கும் சிலர் முதல் கொண்டு அந்த நிலையில் இருந்திருக்கலாம்
அவர் சிறைச்சென்ற நாள் முதல் அவர் வெளியில் வந்த நாள் வரை தினமும் அவரைப் பற்றிய சிந்தனை எனக்கு இருந்தது பலருக்கும் இருந்திருக்கும் என்பதை நான் அறிவேன் சவுக்கு என்றும் சுழன்று கொண்டே இருக்க வேண்டும் என்பதே அனைவரிடன் ஆசையும்
அண்ணனை இன்றைய பகத்சிங் என்றே கூறலாம் .
சந்தோசம் அவரை பார்க்க பார்க்க சந்தோசம்
மாதேஷ் இன் சந்தோசம் அப்படியே தெரிந்து
அண்ணா அவர்கள் பல உண்மையான நண்பர்களை வைத்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி
மேலும் இதுவரை அவருக்காக குரல் கொடுத்து வந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நான் சவுக்கு சங்கர் அண்ணனை பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று ஆசை உள்ளது விரைவில் வெளியிடுகிறேன்
அண்ணனுக்காக - அண்ணன் பின் துணையாக இருப்போம்
நன்றி வணக்கம்
Comments
Post a Comment